பற்றி எரிந்த வீடு – ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்!

0
70

இன்று காலை(27) இடம்பெற்ற தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம், மஹாமன்கடவல, வெவபாறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டாலும், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோரை காப்பாற்ற முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, பிள்ளைகளையும் மனைவியையும் காப்பாற்றச் சென்ற 37 வயதுடைய கணவர் சமந்த, பலத்த தீக்காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டிற்கு அயல் வீடொன்றில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வீட்டினுள் பெற்றோல் இருந்ததாகவும் காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here