உமா ஒயா திட்டத்தின் வெல்லவாய பகுதியின் பொறியியலாளர்கள், தொழிநுட்ப பணியாளர்கள், வாகன சாரதிகள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வேதனத்தை உரிய நேரத்தில் வழங்குதல், மற்றும் வேதனத்தை அதிகரித்தல் முதலான கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உமாஒயா திட்டத்தின் தாழ்வுப் பிரதேசங்களின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும்வரை போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.