தமது கோரிக்கைகள் தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க எந்தவொரு தீர்வும் இதுவரை கிடைக்கப் பெறாதமையினால் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நாளை (27) முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.
மேலும், உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினால் எந்தவொரு தீர்வும் பெறப்படவில்லையெனவும் அது தோல்வியிலேயே முடிவடைந்ததாகவும் அச்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.