பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் விகிதாசாரத்தை அதிகரிக்க மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு.

0
128

பெருந்தோட்ட மக்களின் வாழ்விலே ஒளி ஏற்றுவோம் என்ற தொனிப்பொருளில் மலையகத்திலே பல்கலைக்கழகம் செல்கின்ற மாணவர்களுடைய விகிதாசாரத்தை கூட்டுவதற்குமான செயல் திட்டத்தில் கரிட்டாஸ் செட்டிக் நிறுவனம் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு ஒன்றினை பெற்றுக்கொடுத்து வருகிறது.
இந்நிகழ்வு மத்திய மாகாண சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலும் நேற்று 27 திகதி ஹட்டன் செட்டிக் நிறுவன மண்டபத்தில் நுவரலிய மாவட்ட இணைப்பாளர் அருட்தந்தை நியூமன் பிரிஸ் தலைமையியல் நடைபெற்றது.

இதன் போது கல்வி பொதுத் தராதர உயர்தர கற்கின்ற தெரிவுசெய்யப்பட்ட 30 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் ரூபா 15,000 வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்விற்கு செட்டிக் நிறுவன பெருந்ததோட்ட இணைப்பாளர் திரு சவரிநாத நிக்கலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here