பல்லேகலை முத்துமாரியம்மன் கோவில் தனிநபரின் சொத்தா? இந்து கலாசார அமைச்சுக்கு முறைப்பாடு!

0
68

கண்டி குண்டசாலை பல்லேகலை கோவில் மலை (கிராமசேவகர் பிரிவு குண்டசாலை தெற்கு 692) பெரிய கோவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் சில வருடங்களாக கொழும்பு 13 வசிக்கும் ஒருவரால் துஷ்பிரயோகம் இடம் பெற்று வருகிறது.

இவர் இக் கோவில் தனக்கும் தனது குடுமபத்தின் சொத்து என்றும் தனது தனி நிர்வாகத்தில் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும் என தனது பண பலத்தின் மூலம் பெரிய கோவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தை துஸ்பிரயோகம் செய்து வருகிறார்.

மேலும் பல்லேகலையில் வதிவிடம் மற்றும் பதிவு,வாக்காளர் பெயர் பட்டியல் அற்ற ஒருவர் எவ்வாறு கோயிலை நிர்வகிக்க முடியும்? இது ஒரு சர்வதிகார முறையாகும் அரசாங்கத்தின் காணியில் அமைந்துள்ள கோயில் எவ்வாறு தனி ஒருவருக்கு உரித்தாகும்?

இவ் கோவில் 1.5 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது கோவிலை சுற்றி சுமார் 1200 இந்து குடும்பங்கள் வசிக்கின்றன இவர்களுக்கு வேறு எந்த வணக்கஸ்தலங்களும் இல்லை என்பதை அறிய தருகின்றோம்.

மேலும் இவர்தான் தான் இக் கோவிலின் அரங்காவலர் என்றும் தனக்கு தானே பதவி வழங்கி பொது கோவிலை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளார் மேலும் சுமார் 30 வருடங்களாக நிர்வாக அறிக்கை மற்றும் கணக்கறிக்கை எதுவும் பொது மக்களுக்க கண்பிப்பது இல்லை கோவிலின் முழு வருமானத்தையும் தனியொருவர் அனுபவிக்கின்றார்.

மேலும் இந்த நபர் கொழும்பு 13, கேசரி வீதியில் வியாபார நிறுவனத்தை நடத்தி வருகின்றார் கொழும்பு 13 வசிக்கின்றார்.
இவரால் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் அல்லது துஷ்பிரயோகங்கள் பின் வருமாறு
தனது கொழும்பு வியாபார நிலையத்துக்கு வட் வரி அரசுக்கு செலுத்தாமை
பொது காணியை 1.5 ஏக்கர் நிலப்பரப்பை (கோயில் காணி) தனியொருவரின் பாவனை
கோவில் வருமானம் தொடர்பாக கணக்கரிக்கை காட்டாமை
கோவில் காணியில் புலோக் கல் உற்பத்தி நிலையம் நிறுவியமை
கோவில் பெயரில் புலோக் கல் உற்பத்தி நிலையத்திற்கு முறை கேடாக நீர் மற்றும் மின்சாரம் பொது ஸ்தலங்கள் என்ற பட்டியலில் இணைப்பபை பெற்றமை
30 வருடங்களாக தனி ஒருவரின் கோவில் நிர்வாகம்
கோயில் சம்பந்தமாக எவ்வித ஆவணங்களும் இன்மை
கோவிலில் காணியில் காணப்படுகின்ற (நம்பப்படுகின்ற) புதையல் தோண்டியமை

இவ்வாரன சமூக விரோத செயலில் ஈடுபடுகின்ற கருப்பையா சுதேச மித்திரனுக்கு தண்டனை வழங்கி இவரிடம் இருந்து பல்லேகலை பொது கோவிலை பொது மக்களிடம் ஒப்படைப்பதற்கு மிக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளும் படி மிக தாழ்மையுடன் கேட்ட கொள்கின்றோம்

கோவில் தொ.பே.இலக்கம். 0812422497
பொது மக்கள் மற்றும் இந்து இளைஞர் மன்றம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here