பல நாட்களாக குளிக்காமல் இருந்த கணவனை விவாகரத்துச் செய்த பெண்

0
27

துருக்கியை சேர்ந்த பெண்ணொருவர், பல நாட்களாக குளிக்காமல் மற்றும் பல் துலக்காமல் இருந்த தனது கணவனை விவாகரத்துச் செய்துள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் தாக்கல் செய்த விவாகரத்து அண்மையில், வழக்கு விசாரணை துருக்கிய தலைநகர் அங்காராவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பல நாட்களாக குளிக்காமல் இருப்பதையும் வாரத்தில் சில நாட்கள் மாத்திரமே பல் துலக்குவதையும் அனடோலியாவை சேர்ந்த அந்த பெண், தனது கணவனை விவாகரத்து செய்வதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாரம் ஐந்து நாட்களும் சலவை செய்யாத ஒரே ஆடையை கணவன், திரும்ப திரும்ப அணிவதாகவும் துர்நாற்றம் வீசும் உடலுடன் சுற்றித்திரிவதாகவும் அந்த பெண் குற்றம் சுமத்தியுள்ளார்.

கணவனின் இந்த பழக்கம் காரணமாக அவர்களின் திருமணம் உறவு பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அதற்கு சம்பந்தப்பட்ட ஆணே காரணம் என தீர்பளித்துள்ள நீதிமன்றம், பெண்ணுக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் லீரா வழங்க வேண்டும் எனவும் பெண்ணின் கணவருக்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here