பழம்பெரும் நடிகை சகுந்தலா திடீர் உடல்நலக்குறைவினால் இன்று (19) காலமானார்.
நடிகை சகுந்தலா தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் தான் சகுந்தலா (84). இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
அக்காலத்தில் பிரபலமாக இருந்த லலிதா, பத்மினி, ராகினி இவர்கள் நடத்தி வந்த நடன நாடகங்களில் பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்றார்.
சேலத்தைச் சேர்ந்த இவர், முதன்முதலாக சிஐடி படத்தில் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அன்றிலிருந்து சிஐடி சகுந்தலா என அழைக்கப்பட்டார்.
நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிப்பிற்கு ஓய்வு கொடுத்த இவர் பெங்களூரில் தனது மகள் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று (18) திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் நடிகையான சகுந்தலாவின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிந்து வருகின்றனர்.