பஸ் கட்டணத்தை இன்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 6.56% ஆல் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும் குறைந்தபட்ச கட்டண தொகையில் அதிகரிப்பு செய்யாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட காரணத்தினால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.
அதன்படி பஸ் கட்டணத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு நேற்று மாலை கூடிய நிபுணத்துவ குழுவினால் தயாரிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.