ஹகுரங்கெத்தவிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த, ஹகுரங்கெத்த டிப்போவிற்கு சொந்தமான பேருந்தொன்று மயிலப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து , வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி, நடத்துனர் உட்பட 09 பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (12) இடம்பெற்றுள்ளது .
சம்பவம் தொடர்பில் தலத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .