முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் இலங்கை டி20 அணியின் முன்னாள் தலைவர் மலிங்க பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் 2வது சீசனில் ஆடவுள்ளார்.
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்க காலில் செய்து கொண்ட அறுவை சிகிச்சை மூலம் ஏற்படும் தொடர் வலியால் அவதிப்பட்டு வருகிறார்.
இதனாலே டி20 உலகக்கிண்ண தொடரின் போது தலைவர் பதவியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல், டி20 உலகக்கிண்ண தொடரில் இருந்தும் விலகினார்.
அவர் தொடர்ந்து போட்டிகளில் இருந்து விலகி ஓய்வு பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் மாதம் நடக்கவுள்ள 2வது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளிவந்துள்ளது.