பாகிஸ்தான் நிலைநாட்டிய புதிய சாதனை – மீண்டும் இலங்கை அணி படுதோல்வி

0
141

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 328 என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்தி அடித்திருந்தது.
மொஹமட் ரிஸ்வான் மற்றும் அப்துல்லா ஷபீக் ஆகியோரின் சதத்தின் உதவியுடன், பாகிஸ்தான் அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் பாகிஸ்தான் அணி புதிய உலக சாதனையை பதிவு செய்துள்ளது.

பாகிஸ்தான் 48.2 ஓவர்களில் 345 என்ற வெற்றி இலக்கை அடைந்தது. ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 131 ஓட்டங்களையும், ஷபீக் 113 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.முன்னதாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 328 என்ற இலக்கை வெற்றிகரமாக துரத்தி அடித்திருந்தது.

இதுவே உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு அணி அதி கூடி ஓட்டங்களை துரத்தி அடித்து வெற்றிபெற்ற சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் முறியடித்துள்ளது.

முன்னதாக, குசல் மெண்டிஸ் 122 ஓட்டங்களை பெற்றிருந்த போது உலகக் கிண்ணப் போட்டியில் அதிவேக சதத்தை பதிவுசெய்திருந்தார். சதீர சமரவிக்ரம 89 பந்துகளில் 108 ஓட்டங்களை பெற்றிருந்தது.பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான தனது கிரிக்கெட் உலகக் கிண்ண சாதனையை 8-0 என்ற அடிப்படையில் முன்னிலைப்பெற்றுள்ளது. மேலும் நடப்பு உலகக் கிண்ண தொடரில் இரண்டு வெற்றிகளுன் புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியில் பந்துவீச்சு ஆரம்பம் முதலே பிரச்சினையாக இருந்து வருகின்றது. கட்டுப்பாடு இன்றி பந்து வீச்சாளர்கள் ஓட்டங்களை வழங்கி வருகின்றனர்.முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியினர் 428 ஓட்டங்களை குவித்தனர்.

ஹைதராபாத் – ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் சதம் அடித்திருந்தனர்.இதனையடுத்து 345 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 345 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here