பிரபல சிங்கள பாடகி சமிதா எராந்ததி முதுன்கொட்டுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்ய கொழும்புக்கு வந்திருந்த, விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரிக்கும் தங்குமிடத்தை வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அறிவுறுத்தலின் பேரிலேயே சமிதா, புலிகளின் உறுப்பினர்களுக்கு தங்குமிடத்தை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்படலாம் என்ற அடிப்படையிலேயே ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அவரது அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அப்போது பரவலாக பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.