பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்

0
65

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் கணிசமான எண்ணிக்கையில் மாணவர்கள் வருகை தருவது நாளாந்தம் குறைந்து வருவதாகவும் எனவே அரசாங்கம் இது தொடர்பில் அவதானித்து தேவையான தீர்வுகளை வழங்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தோட்டப் பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைந்துள்ளதாகவும், தற்போது கொழும்பு உள்ளிட்ட புறநகர் நகரங்களிலும் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) குறிப்பிட்டுள்ளார்.

சில மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு வரும் நிலை காணப்படுவதாகவும், பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு, காலணி மற்றும் சீருடைகளின் விலை அதிகரிப்பு மற்றும் பெற்றோரின் நிதி நெருக்கடியினால் அவர்கள் வருகை வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட செயலாளர், பாடசாலை உபகரணங்கள் மற்றும் காலணிகளின் விலைகளைக் குறைத்து, மாணவர்களுக்கு தேவையான வசதிகளை விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here