நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் பல பாடசாலைகள் இன்று தரம் உயர்த்தப்பட்டுள்ள இதேவேளை நவீன கட்டிடங்களையும் கொண்டுள்ளதாக காணப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் இன்னும் சில பாடசாலைகள் அபிவிருத்தி அடையாத நிலையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கல்வி கற்க வேண்டிய துர்பார்க்கிய நிலையில் பாடசாலை கட்டிடங்கள் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
கந்தபளை எஸ்கடேல் தமிழ் வித்தியாலய கட்டிடம் அதற்கு இன்று சான்று பகிர்கின்றது. இப்பாடசாலையில் 1 தொடக்கம் 5 வரையிலான வகுப்புகள் நடைபெறுகின்றது. சுமார் 60 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இக்கட்டிடம் கட்டப்பட்ட காலத்திலிருந்து எவ்வித அபிவிருத்தி வேலைகளும் இடம்பெறவில்லை என பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இதற்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் குறைபாடுகளை இனங்கண்டு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)