யாழ்.மாவட்டத்தில் பாடசாலைகளை இலக்கு வைத்து அதிக விலைக்கு பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட இருவர் போதைப்பொருள் கையிருப்புடன் இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (24) சுன்னாகம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்த போது, அவரிடம் 840 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்று (23) யாழ் மானிப்பாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் ஒருவர் கைது செய்யப்பட்டு சோதனையில் 1400 போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்திலும் நகரிலும் பல பாடசாலைகளுக்கு அருகில் பொதுமக்கள் வேடமணிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீர் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.