பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!

0
120

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக தற்போது வடமாகாணத்தில் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்களில் இரண்டு வார காலத்துக்குள் பதிவை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

” கியூஆர் ” குறியீட்டு முறைமையை பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தும் பொருட்டு சில மேலதிக தகவல்களைப் பெறுவதற்கும் இந்தப் பதிவு அவசியமாகின்றது .

இது தொடர்பான மேலதிக விவரங்கள் தேவைப்படுபவர்கள் மாவட்டச் செயலகங்களில் உள்ள வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்களைத் தொடர்புகொள்ளுமாறு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் சுப்பையா அமிர்தலிங்கம் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here