நுவரெலியா பாடசாலை மட்ட அனர்த்தங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடக போட்டிகள் நடைபெற்றுள்ளது.
நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா கல்வி வலயம் மற்றும் டீ.பீல்ட் நிறுவனம் ஆகியன இணைந்து பாடசாலை மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட, அனர்த்தங்கள் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகங்கள், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்ற பாடசாலைகளுக்கு விருதுகளும் சிறந்த நடிகன், நடிகை ஆகியோருக்கான சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நுவரெலியா வலய கல்வி பணிப்பாளர் எம்.ஜி.பியதாஸ, நுவரெலியா வலய கல்வி மேலதிக கல்விப் பணிப்பாளர் லசந்த, அபிவிருத்தி உதவி கல்விப் பணிப்பாளர் அஜித், டீ பீல்ட் நிறுவனத்தின் கல்வி நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் என்ஜலோ கருணாரட்ண, டீ பீல்ட் நிறுவன தலைமை அதிகாரி நிஸங்க ஹெட்டியாராச்சி, டீ பீல்ட் நிறுவன நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் சாமிலி பஸ்நாயக்க மற்றும் அதிபரகள், ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.