நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கார்லபெக் தமிழ் வித்தியாலயத்தில் நானுஓயா பொலிஸ் அதிகாரி
பிரயந்த அமரசேகர தலைமையில் நானுஓயா பிரதேசத்திலுள்ள தமிழ் சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு வீதி
ஒழுங்குவிதிகள் சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு நானுஓயா கார்லபெக் த.வி. பாடசாலை மண்டபத்தில்
நேற்று 12.06.2018ம் திகதி காலை 10.00 இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பீ.யு சுகதபால மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த வீதி ஒழுங்குவிதிகள் தொடர்பான விஷேட பொலிஸ் அதிகாரிகள் உட்பல பலர் கலந்துகொண்டனர். பகல் 12.00மணியளவில் வீதிக்கு மாணவர்களை அழைத்து வந்து வீதி ஒழுங்குவிதிகள் விழிப்புணர்வு பற்றிய வீதி நாடகங்கள் இடம்பெற்றன.
நடைபெற்ற இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
டீ. சந்ரு.