பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார் ரூபன் பெருமாள்!

0
95

இரத்தினபுரி, ஹபுகஸ்தென்ன, கலபொட, அலுபொல மற்றும் வேவல்வத்த பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் வைபவம் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்களின் தலைமையில் இ/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலைகளின் அதிபரின் சிபாரிசுக்கமைய 66 மாணவர்களுக்கு தலா 3,500ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவிகளை பெற்றுத்தருமாறு மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் கணேஷலிங்கம் ஆவார்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கமைய, அவர் இது தொடர்பில் ஸ்டெலா அம்மையாரின் கவனத்திற்கு கொண்டு சென்று திருகோணமலை பெண்கள் வலையமைப்பின் ஊடக குறித்த பொருட்களை பெற்றுத்தந்தமை குறிப்பிடத்தக்கது மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here