போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது சவால் மிக்கதாக உள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(15.12.2022) கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,ஐஸ் போதைப்பொருள் உட்பட அபாயகரமான போதைப்பொருள் பாவனையில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பது சவால் மிக்கதாக உள்ளது.
எதிர்வரும் 02 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, பொலிஸ் மற்றும் முப்படையினரை ஒன்றிணைத்து போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
கடுமையான தீர்மானங்களை எடுக்காவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் சீரழிந்து போகும்.”என தெரிவித்துள்ளார்.