பாடசாலை மாணவிமீது பாலியல் பலாத்காரம்; மஸ்கெலியாவில் தோட்ட காவலாளி கைது!

0
124

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா அப்புகஸ்தென்ன மேல் பிரிவு தோட்டத்தில் எட்டே வயதான பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய கொடூரம் மஸ்கெலியா ஹப்புகஸ்தனை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த கொடூர செயலை புரிந்ததாக கருதப்படும் அந்த தோட்டத்தின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி காவலாளியை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

குறித்த மாணவி பாடசாலையில் நடைபெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, பாலியல் வல்லுறவு மேற்கொண்டுள்ளதாக மேற்படி மாணவி கல்விகற்கும் பாடசாலை அதிபரினால் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த மாணவி வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்திய அறிக்கை கிடைத்த பின் சந்தேகநபர் அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here