பாடசாலை மாணவி ஒருவரை அறை ஒன்றுக்கு அழைத்து சென்ற நபர் கைது- பொகவந்தலாவையில் சம்பவம்!!

0
153

பொது மக்களால் சந்தேக நபர் மடக்கிபிடிக்கபட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்புஅட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ஹோலிரோஸரி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ,08ல் கல்வி பயிலும் 13வயது மாணவி ஒருவரை அறை ஒன்றுக்கு அழைத்து செல்லபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 17.04.2018.செவ்வாய் கிழமை காலை 09மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

17.04.2018.செவ்வாய் கிழமை காலை தரம் 08 மாணவர்களுக்கு மேலதிக வகுப்பு ஒன்றுக்கு அனைத்து மாணவர்களும் அழைக்கபட்டிருந்த வேலை குறித்த வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு இல்லையென அறிவுருத்தல் வழங்கியமைக்கமைய இந்த வித்தியாலயத்தின் மாணவி பாடசாலையின் மைதானத்தின் வழியாக வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த வேலை ஹோலிரோஸரி தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய கட்டிடம் ஒன்றின் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த கண்டி பகுதியை சேர்ந்த 34வயதுடைய மேசன் ஒருவரால் குறித்த சிறுமிக்கு உணவு தருவதாக கூறி அறை ஒன்றுக்குல் அழைத்து சென்றுள்ளதாகவும் சம்பவத்தை கண்ட வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் இணைந்து சிறுமியை மீட்டுள்ளதோடு சந்தேக நபரை மடக்கி பிடித்து பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கபட்ட 13வயது சிறுமி பொகவந்தலாவ ஜெப்பல்டன் டி.பி .தோட்ட பகுதியை சேர்ந்தவர்யெனவும் சிறுமி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்ட சந்தேக நபர் 18.04.2018 அட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here