பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையில் உயர்வு!

0
132

பாணின் விலை உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்பட நேரிட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

பேக்கரி உற்பத்திகளுக்காக பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கான விலைகள் 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

அதன்படி பொருட்களுக்கான வரி அதிகரிப்பு காரணமாக பாம் எண்ணெய், மாஜரீன், உப்பு, சீனி உள்ளிட்ட பேக்கரி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் 20 வீதத்தினால் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளோம்.

பேச்சுவார்த்தையின் பின்னர் விலை அதிகரிப்பு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here