கண்டி நுவரெலியா பிரதான பாதையில் இரட்டைபாதை நகரத்தில் இருந்து தொரகல கிராமம் நீவ்பீகொக் தோட்டம் ஊடாக கொத்மலைக்கும் கொத்மலை மகாவெயிசாயவிற்கும் செல்லும் பிரதான பாதையை புணரமைத்துதரக்கோரி பாரிய ஆர்பாட்டமொன்று 21.05.2018 நடைபெற்றது
17 கிலோ மீற்றர் வீதி சுமார் 40 வருடங்களாக திருத்தபடவில்லை அத்துடன் பாதையின் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து பல மாதங்களாகியும் திருத்தபடவில்லை அதனால் அதனை திருத்தி தருமாறு கோரி இரட்டைபாதை நகரத்தில் கண்டி நுவரெலியா பிரதான பாதை மறித்து ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் கண்டி நுவரெலியா பிரதான பாதையின் போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்படமையினால் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு உள்ளானர்.
புஸ்ஸல்லாவ போக்குவரத்து பொலிஸார் உட்பட கம்பளை பொலிஸார் சம்பந்தப்ட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததையடுத்து ஆர்பட்டம் கைவிடப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்