இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய 3ஆவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கட்டுகளால் வெற்றிக்கொண்டுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில், 2 விக்கட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் பெப்டு பிளஸி 88 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில், 206 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியில் இலக்கை அடைந்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில், பானுக்க ராஜபக்ஷ 22 பந்துகளில் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.