பாரம்பரிய கலைகளை பாதுகாப்பதற்கும் மக்களுக்கு நன்மை பயப்பதற்கும் காமன் கூத்தினை கொண்டாடுகிறோம.; என மஸ்கெலியா லக்ஸபான தோட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்
நேற்று (22) லக்பான தோட்டத்தில் காமன் கூத்து இடம்பெற்ற போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்; மலையக பகுதியில் உள்ள தோட்டப்புறங்களில் மக்களின் வாழ்வியல் அம்சங்களையும் பிரதிபலிக்கும் காமன் கூத்து தோட்டப்புறங்களில் இந்த மாதம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒரு சில தோட்டங்களில் ஒரு மாத காலமாகவும் ஒரு சில தோட்டங்களில் 12 நாட்களும் குறித்த கூத்து கொண்டாடப்பட்டு வருகின்றனர். மஸ்கெலியா லக்ஸபான தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக காமன் கூத்து கொண்டாடப்பட்டு வருவதாகவும் அதனால் மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படுவதாக இங்கு வாழும் மக்கள் தெரிவிக்கின்றனர்;
ஆரம்பத்தில் இந்த கூத்தினை மூதாதையர்களால் கொண்டாடப்பட்டு வந்ததாகவும் தற்போது இந்த கூத்து அழிந்து விடக்கூடாது என்பதற்காகவும் மக்களின் நலன் கருதி இதனை தாங்கள் கையில் எடுத்து கொண்டாடிவருவதாக இந்த தோட்டத்தில் வாழும் இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் 26 ம் திகதி குறித்த தோட்டத்தில் சகல அம்சங்களுடன் காமன் கூத்து கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்;.
மாசி மாதம் முழுவதும் மலையகத்தில் காமன் கூத்தால் தோட்டங்கள் விழாக்கோலம் காண்பதும் குறிப்பிடதக்கது. எது எவ்வாறான மலையக சமுதாயத்தினை பொறுத்தவரையில் கூத்து என்பது மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கிறது. கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இலங்கையின் மலைப் பகுதிகளில் தேயிலை தொழிலுக்காக வரவழைக்கப்பட்ட மக்கள் அவர்களுடன் சேர்ந்து அவர்களின் வாழ்வியல் அம்சங்களையும் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளன. அவற்றுள் கூத்துக்களும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது.
அதாவது தோட்டப்புறங்களில் வாழ்ந்த மக்கள் இவர்களின் வேலை முடிந்தவுடன் மாலை நேரங்களில் தங்களது பாரம்பரியக் கூத்துக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று கூடி ஆடி மகிழ்வது வழக்கம.; அவ்வாறு மக்கள் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்து உயிரோடு இன்றும் அழியாது கூத்துக்களாக காமன் கூத்து,பொன்னர் சங்கர், அர்ஜுனன் தபசு ,நல்ல தங்காள் போன்றன மலையகப்பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
மலைவாஞ்ஞன்