பார்ப்பவர்களின் கண்களை கலங்கவைத்த சிறுவன் – அனுராதபுரத்தில் நடந்த சோகம்!!

0
101

அனுராதபுரத்தில் மிகவும் பசியின் கொடுமையால் குப்பையிலுள்ள உணவினை சிறுவன் ஒருவர் உட்கொள்ளும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சிறுவனின் அவல நிலையை நேரில் பார்த்த பெண்ணொருவர் அதனை புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “இது வேறு எங்கும் அல்ல… அனுராதபுரத்தில் சிறுவன் ஒருவர் பசியை பொறுத்துக் கொள்ள முடியாமல் குப்பையில் உணவு தேடி உட்கொள்கிறார்.

கொழும்பு நகரத்தை அழகுப்படுத்தி.. சுத்தப்படுத்தி பூங்கா அமைத்தால் மாத்திரம் போதுமா? இவ்வாறான பிள்ளைகள் எத்தனை பேர் நாட்டில் உள்ளனர்.

இன மதங்களை பிடித்து வைத்து கொண்டு வாக்குகளுக்கு சுற்றி திரிவதில் இன்று பலர் உள்ளனர். இவற்றை ஓரமாக வைத்து விட்டு இவ்வாறான பிள்ளைகளுக்கு உணவளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

இந்த பிள்ளை தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் கிடைத்தால் அறிவிக்குமாறு கேட்டு கொள்கின்றேன்.. என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவினை பார்த்த பலர் இதயத்தை கனக்கச் செய்துள்ளதாக பதிவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here