பால் உற்பத்தியாளர்கள் பாலின் விலையை அதிகரிக்க கோரியுள்ளனர்

0
112

xகிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலை அதிகரிக்காமையால் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் தமது பாலிற்கான விலையை அதிகரித்து தருமாறு அரசாங்கத்திடம் கேட்டு நிற்கின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றங்களினால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில் பாலின் விலையை மாத்திரம் அதிகரிக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை நாளுக்கு நாள் விலை ஏற்றி பால் உற்பத்தியை மாத்திரம் நம்பி இருக்கும் எமக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிக சிரமமாக உள்ளது எனவும் எமது பாலுக்கான விலையையும் அதிகரித்து தருமாறு கேட்டு நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here