பால் ஏற்றிசென்ற சிறிய பாரஊர்தி விபத்து – பொகவந்தலாவையில் சம்பவம்!!

0
170

பால் ஏற்றிசென்ற சிறிய பாரஊர்தி விபத்து.

பொகவந்தலாவயில் இருந்து மோர தோட்டபகுதியை நோக்கி சென்ற சிறியரக பாரஊர்தி ஒன்று 03.02.2018.சனிகிழமை காலை 09.30 மணி அளவில் விபத்துக்குள்ளாயுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

IMG_20180203_112904 IMG_20180203_112938 IMG_20180203_113059

குறித்த சிறிய ரக பாரஊர்தியானது பால் சேகரிப்பதற்காக பொகவந்தலாவ டின்சினிலிருந்து மோரா தோட்டபகுதியியை நோக்கி சென்ற சென்றபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

வாகனத்தை செலுத்திய சாரதிக்கும் மற்றுமொருவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here