அரசியல் அந்தஸ்தினை வழங்கிய எனது மக்களுக்கு பிறக்கபோகும் விளிம்பி புத்தாண்டில் சிறப்பான சேவையை செய்வேன் என உறுதிபேனுவோம் என இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமாகிய பா.சிவனேசன் சித்திரை புத்தாண்டு வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
பழைய ஆண்டின் இறுதிநாள் இந்த ஹேவிளிம்பி ஆண்டில் நண்மை தீமைகள் நடந்திருந்தாலும்கூட எல்லாம் இறைவனின் செயல் என்று கருதி ஹேவிளிம்பி ஆண்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு நாளை பிறக்கபோகும் விளிம்பி ஆண்டை தற்தமது குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக வரவேற்பதுடன் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ பிராத்தித்துகொண்டு நாளை உதயமாகும் புத்தாண்டில் இருந்து எனக்கு அரசியல் அந்தஸ்தினை வழங்கிய தலைவர் கௌரவ அமைச்சர் திகாம்பரம் அவரின் ஆலோசனைக்கமைய எனக்கு அரசியல் அங்கிகாரம் வழங்கிய எனது மக்களுக்கு சிறப்பான சேவையை முன்னெடுத்துசெல்வேன் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.