பிக் பாஸில் இறுதி வரை செல்லும் 5 போட்டியாளர்கள்…டைட்டில் வின்னர் இவர் தானாம்..!

0
40

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் யார் இறுதி வாரத்தில் இருக்கும் 5 போட்டியாளர்கள் மற்றும் டைட்டிலை தட்டி தூக்கி செல்லும் போட்டியாளர் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.விஜய் டிவியில் கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 20 பேர் கொண்டு ஆரம்பிக்ப்பட்டது. இதில் வையல் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்தார். மேலும் இதில் முதல் வாரம் சாந்தி மற்றும் ஜிபி முத்து இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்கள்.

எனினும் இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வார நாமினேஷனில் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இவ்வாறுஇருக்கையில் போட்டியாளர்களில் யார் இறுதி வாரத்திற்கு செல்லும் டாப் 5 போட்டியாளர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.

மேலும் இந்த டாப் 5 லிஸ்டில் விக்ரமன், சிவின், அசீம், தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்டோர் உள்ளனர். மேலும் இந்த ஐந்து பேர்களில் கடைசி இடம் சீரியல் நடிகை ஆயிஷா பெற போகிறார். அவரைத் தொடர்ந்து 4-வது இடம் சீரியல் நடிகர் அசீம் பெறுவார். அதைத்தொடர்ந்து 3-வது இடம் பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்யும் வாயாடி தனலட்சுமி பெறுவார்.

கடைசி இரண்டு இடங்களுக்கு தான் கடும் போட்டி நிலவ போகிறது. அத்தோடு இரண்டாவது இடம் சிவின் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிகள் திருநங்கையாக கலந்து கொண்ட நமிதா மாரிமுத்து உடல்நிலை குறைவு காரணமாக வந்த சில நாட்களிலேயே வெளியேறி விட்டார்.

அத்தோடு அவர் மட்டும் கடந்த சீசனில் இறுதிவரை இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி வாய்ப்பை பெற்றிருக்கலாம். ஆனால் நமிதா மாரிமுத்து மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றாததால் தற்போது ரசிகர்கள் திருநங்கை சிவில் மீது வைத்துள்ளனர். ஆகையால் சிவின் கடைசி வாரம் வரை வந்து அவரை வெற்றி பெற வைக்கவும் ரசிகர்கள் துடிதுடிகின்றனர்.

அத்துடன் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்து நியாயமாகவும் நேர்மையாகவும் விளையாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கும் செய்தியாளர் விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டித் தூக்கப் போகிறார். எனவே இவர்கள் ஐந்து பேர் தான் இறுதி வாரத்தில் மோதிக் கொள்ளும் போட்டியாளர்கள் என்ற தகவல் தற்போது இணையத்தில் காட்டுத்தை போல் பரவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here