பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு உதவுவதே எமது ஒரே நோக்கம்- நேசன் சங்கர் ராஜி தெரிவிப்பு

0
52

மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் இன்று பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் இதனால் இவர்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதில் பலர் சிரமப்படுகிறார்கள் இவ்வாறு வறுமை மற்றும் பல்வேறு காரணங்கள் காரணமாக கல்வி தொடர முடியாது இருக்கின்ற மாணவர்களுக்கு உதவுவதே எமது ஒரே நோக்கம் என சங்கர் ராஜி அறக்கட்டளை நிறுவனத்தின் ஸ்தாபகர் நேசன் சங்கர் ராஜி தெரிவித்தார்.
மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சங்கர் ராஜி அறக்கட்டளை செயப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று தலாக்கலை பகுதியில் நேற்று மாலை 04 ம் திகதி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் நான் எனது சொந்த நிதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மலையகத்தில் மத்திய மாகாணத்திலும் ,சம்பூர் கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் எனது தந்தையின் பெயரில் பல வேலைதிட்டங்களை முன்னெடுத்து வருகிறேன் கடந்த காலங்களில் நுவரெலியா கல்வி வலயத்தில் மாணவர்களின் கனணி அறிவினை விருத்தி செய்வதற்காக பாடசாலைக்களுக்கு கனணிகளை பெற்றுக்கொடுத்துள்ளேன் அத்துடன் நின்று விடாது மாணவர்களின் போசாக்கு மட்டத்தினை அதிகாரிப்பதற்காக சத்துணவு வேலைத்திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளேன.; இதே போல் உயர்தரம் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி கணித விஞ்ஞான பாடங்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளையும்,மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களையும் பெற்றுக்கொடுத்து வருகிறேன்.

MEMORIAL TRUST NESAN SANKAR CUT- HATTON SUNDAR -2024.08.05 (2)

மலையக மக்களின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணபதற்கு என்னால் முழுமையாக செய்ய முடியாது ஆனால் அவர்களின் கல்வியினை உயர்த்துவதன் மூலம் ஒரு சில குடும்பங்களையாவுது நல்ல நிலைக்கு கொண்டு வர முடியும் என்பது எனது நம்பிக்கையாகும் இதனை என தந்தை அடிக்கடி கூறுவார் பின் தங்கிய சமூகத்தின் விடிவுக்கான திறவுக்கோள் கல்வி என்று இன்று அவர் தொட்டுச் சென்ற விடயத்தினை நான் தொடர்கிறேன் எதி;ர்காலத்திலும் மலையக மாணவர்களின் கல்வி வளர்;ச்சிக்காக என்னென்ன தேவைப்படுகிறதோ அதனை எமது அறக்கட்டளை நிறுவனம் நிறைவேற்றும் அது மாத்திரமின்றி புதிய தொழிநுட்ப அறிவான ஏஐ தொழிநுட்பம் மற்றும் தொழில் வழிகாட்டல் வெளிநாட்டு பட்டப்படிப்பு உள்ளிட்ட விடயங்களையும் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் சங்கர் ராஜி அறக்கட்டளை நிறுவனத்தின செயலாளர் ஆ.கமல்,மத்திய மாகாண இணைப்பாளர்களான ராஜ்குமார்,எஸ் ஆம்ஸ்டோம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here