பிரதமர், ஐ.தே.மு மற்றும் ஐ.தே.கட்சியினருடனான சந்திப்பு இன்று!

0
115

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.

இரண்டு சந்திப்புக்கள் இன்றைய நடத்தப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அமைச்சரவை அமைச்சர்களுடன் பிரதமர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார். இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நாடாளுமன்ற வாளகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் இம்முறை நாடாளுமன்றம் தெரிவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் அலரி மாளிகைக்கு அழைத்துள்ளார்.

இன்று மாலை பிரதமருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here