நாட்டை என்னால் மீட்டெடுக்க முடியாவிட்டால் தான் பிரதமர் பதவியிலிருந்து விலகிச் சென்றிடுவேன் என பிரதமர் தெரிவித்துள்ளார்.மேலும், மற்றவர்களை போன்று தனக்குப் பதவி ஆசை இல்லை என்றும்,நாட்டின் நலன் கருதியே பிரதமர் பதவியை ஏற்றதாகவும் தெரிவித்த அவர் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பிரகாரம் நிதி அமைச்சையும் பொறுப்பேற்றதாக தெரிவித்தார்.
உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருவதோடு. சர்வதேச நாடுகளின் முக்கியஸ்தர்களுடனும், உதவிகள் வழங்கும் சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தாhர். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பிலும், எதிர்கால நிலைமை குறித்தும் உண்மைத் தகவல்களையே வெளியிட்டு வருவதாகவும, தனது கருத்துக்கள் தொடர்பில் எவரும் பதற்றம் அடையத் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.