பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் பிரதிநிதிகளும் கையொப்பமிட வேண்டும் – பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு!!

0
125

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மட்டுமல்லாது நாடாளவிய ரீதியில் இருக்கின்ற தமிழ் பேசுகின்ற தமிழ், மூஸ்லீம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற பிரதிநிதிகள் யாவரும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.

அட்டனில் 23.03.2018 அன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்டு நாடாளுமன்றத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு முழுயைான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் சிறுபான்மை மக்கள் இந்த நாட்டிலே பாதுகாக்கப்படுவார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட வட, கிழக்கு பகுதிகளில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளையும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு புதிய ஒரு பிரதமர் தெரிவு செய்யப்படுவராயின் அது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருக்க கூடாது. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கடந்த காலங்களில் தமிழ் மக்களை அடக்கி வாழ்ந்த மனிதன்.

அவ்வாறு புதிய பிரதமர் தெரிவு செய்யப்படுவராயின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவின் கீழ் இருக்கின்ற நிமால் சிறிபால டி சில்வா அவர்களோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சிரேஷ்ட பிரமுகர்கள் தான் பிரதமராக இருக்க வேண்டும்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து மீண்டும் ஒரு இனவாதியை இந்த நாட்டில் உருவாக்க கூடாது என தெரிவிக்கின்றேன் என்றார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here