பிரதான கட்சிகளுக்கு எதிர்காலத்தை நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமையும்!!

0
157

பிரதான கட்சிகளுக்கு எதிர்காலத்தை நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த தேர்தல் அமையும் – வே.இராதாகிருஷ்ணன்

நாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பலாங்கொடை இம்புல்பே பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக றை தோட்டம் கெபொக் பிரிவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டில் இனி பிரச்சினைகள் இடம்பெறுவதற்கு இடமில்லை. யாழ்ப்பாணத்திலேயே இன்று பிரச்சினைகள் இல்லை என்றால் மலையக மக்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் பிரச்சினைகள் வராது.

எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் எதிர்கால அரசியலை தீர்மானிக்க கூடிய ஒரு முக்கியமான தேர்தலாகும். ஜனாதிபதி தேர்தலை விட இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் மிக அவசியமானதாக காணப்படுகின்றது. ஒரு புறம் ஒரு நாளுக்கு பிரதமர் பல கூட்டங்களுக்கு செல்கின்றார். மறுபுறம் ஜனாதிபதி ஒரு நாளுக்கு பல கூட்டங்களுக்கு செல்கின்றார்.

நாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இது காணப்படுகின்றது. இதனாலேயே இவர்கள் பல கூட்டங்களுக்கு செல்கின்றனர்.

ஆதலால் தமிழர்கள் இதில் முழு பயனை அடையக்கூடிய வகையில் தங்களது வாக்குகளை அந்தந்த பிரதிநிதிகளுக்கு அளித்து பிரதிநிதிகளை வெற்றிப்பெற செய்யவதன் மூலம் தான் தமது தன்மானத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஆகவே இந்த தன்மானத்தை காப்பாற்ற ஒருமித்து எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here