பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்சாரம், போக்குவரத்து ஸ்தம்பிதம்!!

0
98

தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இப்பகுதிக்கான மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.15.02.2018 அன்று மாலை 4 மணிக்கு இப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக முறிந்து விழுந்த மரம் மின்சார இணைப்புகள் மீது விழுந்ததினால் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதான வீதியில் இம்மரம் முறிந்து விழுந்ததில் இவ்வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

இதனையடுத்து இலங்கை மின்சார சபையினர் அவ்விடத்திற்கு விரைந்து மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர்.

DSC02412 DSC02416 DSC02420 DSC02421 DSC02410

முறிந்து விழுந்த மரங்களில் குளவி கூடுகள் காணப்படுவதனால் அப்பகுதியில் செல்லும் பயணிகளும், பிரதேசவாசிகளும் அச்சமடைந்திருக்கின்றனர்.

எனினும் மின்சார இணைப்பினை சீர்செய்வதற்கும், குளவி கூடை அகற்றுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை மின்சார சபையின் லிந்துலை பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here