பிரதான வீதியை செப்பணிட்டு தருமாறு கோரி நோட்டன்பிரிட்ஜ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுப்பு!!

0
115

நோட்டன்பிரிட்ஜ், தெபட்டன் பிரதான வீதியை செப்பணிட்டு தருமாறு கோரி இப்பகுதி மக்கள் 28.04.2018 அன்று காலை ஆரப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

10 வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படும் நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியிலிருந்து பிரிந்து செல்லும் தெபட்டன் சந்தியிலிருந்து கொத்தலென்ன வரையிலான சுமார் 6 கிலோ மீற்றர் கொண்ட பிரதான வீதி மக்கள் பாவனைக்கு உதவாத வகையில் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.

இவ்வீதியினூடாக பிரயாணங்களில் ஈடுப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லெண்ணா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் விடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்பிரதான வீதியை செப்பணிட்டு தரும்படி கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தெபட்டன் சந்தியில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பொதுமக்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்த போதிலும், மக்கள் இவ் உத்தரவுக்கமைவாக வீதியில் மறிங்கில் இருந்து போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடதக்கது.

DSC06310 DSC06312 DSC06324 DSC06328 DSC06337 DSC06392

08 12

கடந்த காலங்களில் தேர்தல் காலப்பகுதி ஒன்றில் இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த அரசியல்வாதிகள் இப்பிரதான வீதியை செப்பனிடப்படும் எனவும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதிகள் அளித்துள்ளனர். இருந்தபோதிலும், வீதியை செப்பனிடுவதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையில் இத்தனை காலமாக காத்திருந்த மக்களுக்கு விமோர்ஷனம் கிடைக்காத பட்சத்தில் வீதிக்கு இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டினர்.

அத்தோடு இவ்வீதியினூடாக பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் தொழிலுக்கு செல்போவர்கள் வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவசர பிரயாணங்களை மேற்கொள்பவர்களில் நிலைமையை கருத்திற்கொண்டு உடனடியாக இப்பிரதான வீதியை செப்பனிட காலம் தாழ்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என போராட்டவாதிகள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 

க.கிஷாந்தன், எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here