பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவுக்கு நேற்றிரவு அவசர இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்துகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தெவரப்பெருமவுக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
களுத்துறை மீகாதென்ன ஆரம்ப பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாலித தெவரப்பெரும பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.