பிரதேச சபைகள் தொடர்பில் திலகர் கேள்வி: பதிலளிக்க ஒருமாதம் அவகாசம்!

0
119

பெருந்தோட்டங்கள் அமைந்துள்ள பிரதேசங்களிலுள்ள பிரதேச சபைகளுக்கு தமது சேவைகளை நிறைவேற்ற முடியாதவாறு பிரதேசசபைச் சட்ட ஏற்பாடுகள் அமைந்துள்ளன.

அவற்றை திருத்துவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்காக அமைச்சரவைப் பத்திரமொன்றும் சமர்பிப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்படி சட்ட ஏற்பாடுகளுக்கான திருத்தங்களின் தற்போதைய நிலைமையாதென எம்.பி. திலகராஜா எம்.பியால் எழுப்பபட்ட வினாவுக்கு பதிலளிப்பதற்கு ஒருமாத கால அவகாசத்தைக் கோரியுள்ளார் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா.

நாடாளுமன்றம் நேற்று முற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரூ ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூலவிடைக்கான கேள்விநேரத்தின்போதே இது தொடர்பில் அமைச்சரிடம் கேள்விகளை திலகர் எம்.பி. தொடுக்கவிருந்தார். அவரின் கேள்விகள் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திலும் இடம்பெற்றிருந்தன.

மேற்படி சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா, குறித்த சட்டத்திருத்தங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படும் திகதி யாது? என்றும் திலகராஜ் வினாக்களை எழுப்பியிருந்தார். இவற்றுக்கு பதில்களை வழங்குவதற்கே ஒருமாதகால அவகாசத்தை அமைச்சர் கோரியுள்ளார்.

 

பாண்டியன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here