பிரபல கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகை பூஜா ஹெக்டே? வெளிவரும் தகவல்

0
59

கிரிக்கெட் வீரர் யார் என்ற விவரம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

இரண்டாவது படமாக விஜய்யுடன் பீஸ்ட்டில் நடித்தார். இந்த படம் மூலம் பூஜா ஹெக்டே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.பிரபாஸ் உடன் ராதே ஷாம் திரைப்படத்திலும் நடித்தார்.

இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைவதால் சிலர் இவரை ராசி இல்லாத நடிகை என்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தார்கள்.இந்நிலையில் மும்பையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை பூஜா ஹெக்டே திருமணம் செய்ய உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆனால் பூஜா ஹெக்டே இது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்போ, விளக்கமோ எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் கிரிக்கெட் வீரர் யார் என்ற விவரமோ, மற்ற தகவல்களோ வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here