பிரபல பாடசாலையின் 12 ஆம் தர மாணவரொருவர் துப்பாக்கி ரவைகளுடன் கைது!

0
106

கரந்தெனிய பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 12 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தோட்டாக்கள் T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது, வீடொன்றின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை கைப்பற்றச்சென்ற போது, காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக அவரது தந்தையும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here