பிரபாகரனின் படத்துடன் அவுஸ்ரேலியாவில் நிதி திரட்டப்படுகிறதாம்! – பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்

0
142

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் பணம் திரட்டி வருகின்றனர் என நாடாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

‘பிரபாகரனின் புகைப்படங்களை காண்பித்து அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் இவ்வாறு பணம் திரட்டப்பட்டு வருகின்றது.

நான் ஒரு மாத காலம் வெளிநாட்டு தங்கியிருந்தேன். சிட்னி மற்றும் மெல்பர்ன் ஆகிய நகரங்களில் சில நாட்கள் நான் தங்கியிருந்தேன்.

இதன் போது இலங்கை நண்பர்கள் என்னை கறுப்பு கோர்ட் அணிவித்து மிகவும் பாதுகாப்பான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர்.

உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்தைக் காண்பித்து எதற்காக சர்வதேச ரீதியில் நிதி திரட்டப்படுகின்றது.

எனவே, குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தின் ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறு விசாரணை நடத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எனக்கு காணப்படுகின்றது என பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here