பிரித்தானியாவுடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதன் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ள நிலையில், இலங்கை பாரிய சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
இவ்வாறு ஏற்படவுள்ள பாதிப்புகளில் இருந்தும் சவால்களில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் இந்த புதிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றித்தின் சந்தையானது உலகிலுள்ள பாரிய தனி சந்தை வாய்ப்பாகும். இதனால் இலங்கை பாரிய பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஜப்பான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்த்து வந்தன.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.