பிரேசிலில் விமான விபத்து – பயணித்த அனைவரும் பலி: வெளியான பரபரப்பு காணொளி

0
49

பிரேசிலின் (Brazil) சாவ் பாலோவில் (Sao Paulo) பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விபத்தின் போது, குறித்த விமானத்தில் 58 பயணிகள் உட்பட 4 விமான நிறுவன ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விமானம் Vinhedo நகரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி இருப்பதை அந்நாட்டு தீயணைப்பு படையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்த ATR-72 விமானமானது பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலிருந்து சாவ் பாலோவின் சர்வதேச விமான நிலையமான கேரோலியோஸ் நோக்கி சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

https://x.com/AlertaMundoNews/status/1821965330195083353?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1821965330195083353%7Ctwgr%5E7a9eb0da5f6987d494c8a4ad8bf391f1d0e02db3%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fibctamil.com%2Farticles%2F572632%2Fedit

இதன் படி, விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 62 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here