பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!! பொதுமக்கள் அந்தரிப்பு!

0
64

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இந்து ஆலயம் ஒன்று திறக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த கோவில் எதிர்வரும் 14ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாரம்பரிய இந்து முறைப்படி கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 108 அடி உயரமும் 180 அடி அகலமும் கொண்டதாகவும், ஆலய மைதானம் 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கட்டிடத்தில் 10,000 பேர் வரைக்கும் செல்லக்கூடியதாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வவுனியா பிரதேச செயலகத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டமையால் அவற்றை பெற்றுக்கொள்ளச்சென்ற பொதுமக்கள் அந்தரிப்பிற்குள்ளாகினர்.

வவுனியா பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பிறப்பு இறப்பு திருமணச்சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இன்றையதினம் பொதுமக்கள் சென்றிருந்தனர்.

இந்நிலையில் காலை 9 மணிக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டநிலையில் மாலை 3 மணிவரை பொதுமக்கள் காக்கவைக்கப்பட்ட போதிலும் பலருக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறவில்லை.

இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு உள்ளாகினர். அவசரத்தேவை நிமித்தம் சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக வருகைதந்திருந்தோம் எனினும் ஒருநாள் முழுவதும் நின்று கூட அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கவலை தெரிவித்தனர்.

தாமதம் காரணமாக கடமையில் இருந்த அலுவலர்கள் மீதும் தமது ஆத்திரத்தை செலுத்தினர்.இதேவேளை வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்டவர்களிற்கான விண்ணப்பங்கள் இன்றையதினம் குறித்த அலுவலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருந்தனர்.

இதேவேளை குறித்த அலுவலகத்தில் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதால் தொடர்ச்சியாக இந்தநிலமை ஏற்ப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும் தேவைக்கேற்ற ஊழியர்களை நியமித்து வினைத்திறனான புதிய முறைமை ஒன்றை உருவாக்கி அதனை சீர்செய்ய முடியும் என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here