பிறப்பு சான்றிதழை பெற இறப்பு சான்றிதழ்களை வழங்கும் பிரதேச செயலகம்

0
29

பிறப்பு சான்றிதழ் பெற்றுகொள்வதற்காக வரும் பொது மக்களுக்கு, இறப்பு சான்றிதழுக்கான விண்ணப்பத்தை வழங்கும் நுவரெலியா பிரதேச செயலகத்தால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சிங்களத்தில் உள்ள ‘மரணம்’ என்ற வார்த்தை மீது பேனையால் கோடிட்டு அதில் ‘BIRTH’ என்று ஆங்கிலத்தில் எழுதி பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் ஒரு மொழி மட்டுமே தெரிந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா பிரதேச செயலக பொறுப்பதிகாரிகளிடம் கேட்டபோது, ​​பிறப்பு சான்றிதழ் நகல்களை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்த போதிலும், தேவையான விநியோகத்தை வழங்க தவறியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here