தென் சீன கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பலை சீன கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளதாக பிலிப்பைன்ஸ் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
சீன கப்பல்கள் வலுவான தண்ணீா் பீரங்கியை பயன்படுத்தி பிலிப்பைன்ஸ் கப்பலை தாக்கியதால் அக் கப்பல் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கப்பலில் இருந்த பணியாளா்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனா்.