தனது மகளினால் வீதியில் விட்டுசென்ற தாயின் சடலத்தை நல்லடக்கம் செய்ய தோட்டமக்களினால் ஏற்பாடு
பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி தோட்டபகுதியை சேர்ந்த வீரய்யா ,வல்லியம்மா ஆகியே இருவரும் பொகவந்தலாவ கொட்டியாகலை என்.சி. தோட்டபகுதியில் தமது வாழ்க்கையினை கூடாரம் ஒன்றில் வாழ்ந்து வந்தமை குறிப்பிடதக்கது.
இவர்களின் மகள் திருமணம் முடித்துவைத்த பின் இவர்களிடம் இருந்த பணம் அனைத்தையும் மகளும் மருமகனும் பெற்று கொண்டதன்பின் தனது பெற்றோர்களை பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் விட்டு சென்றுள்ளதாகவும் இவர்களை இனங்கண்ட கொட்டியாகலை என்.சி.தோட்டமக்கள் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்து இவர்களை குறித்த தோட்டபகுதிக்கு அழைத்து சென்று தோட்ட நிர்வாகத்திடம் பேசி கூடாரம் ஒன்றை அமைத்து இவர்கள் இருவரையும் பொகவந்தலாவ கொட்டியாகலை என்சி தோட்டமக்கள் பாதுகாத்து வந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லியம்மாவின் கணவர் வாதநோயினால் பாதிகக்பட்டவர் தனது கணவரின் அனைத்து வேலைகளையும் வல்லியம்மா அந்த கூடாரத்திலேயே மேற்கொண்டு வந்தார் சுமார் ஒரு வருடகாலமாக அனாதரவாக விடபட்ட இவர்களை இவர்களின் உறவினர்களோ இவருடைய மகளோ இவர்களுக்கு எவ்வித உதவி கரமும் நீட்டவில்லையென பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலினால் பாதிக்கபட்ட வல்லியம்மா 07.06.2018.வியாழக்கிழமை காலை 08மணி அளவில் உயிர் இழந்துள்ளார். உயிர் இழந்த செய்தியை பொகவந்தலாவ பொலிஸாரின் ஊடாக வல்லியம்மாவின் மகளுக்கு தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு கூறியதும் தாம் கொழும்பில் இருப்பதாகவும் என்னால் வரமுடியாது என கூறியதாக பொலிஸாரும் பிரதேசமக்களும் குறிப்பிடுகின்றனர்.
வல்லியம்மாவின் இறுதி கிரியைகளை பொகவந்தலாவ கொட்டியாகலை என்சி தோட்டமக்கள் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடதக்கது.
எனவே இந்த வல்லியம்மாவிற்கு எற்பட்ட இந்நிலைமை வேறு எந்த ஒரு பெற்றோருக்கும் இடம் பெற கூடாது என பொகவந்தலாவ கொட்டியாகலை என்சி தோட்டமக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதிஸ்)