பிரித்தானிய அரச ஊடகமான பி.பி.சி, வானொலி 1927ஆம் ஆண்டு முதல் நடத்திவருகின்றது. முதலில் ஆங்கிலம் மூலம் மாத்திரம் தொடங்கப்பட்ட சேவையானது, தற்போது 27 பிராந்திய மொழிகளில் ஒலிபரப்பு சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் 1941 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பி.பி.சி தமிழோசை வானொலி சேவையானது, தனது 76 வருடகால சேவையை ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இணையத்தளங்களின் ஆதிக்கம் காரணமாக இந்த வானொலியை செவிமடுப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.